கொழும்பு துறைமுகப் பகுதியில் பாரிய குண்டுச் சத்தங்கள்:
மக்கள் பதற்றம்; கடற்படை ஒத்திகை என தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 02:25.41 AM GMT +05:30 ]
கொழும்பில் இன்று காலையில் பாரிய குண்டுச் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் துறைமுகப் பகுதியில் கேட்டவண்ணம் இருந்தன. மக்கள் ஏதோ தாக்குதல் நடைபெறுகின்றது என பதற்றமடைந்தனர். சற்றுநேரத்தின் பின் கடற்படையினரின் ஒத்திகை என அறிவிகககப்பட்டது. இதன் பின்னர்தான் மக்களின் பதற்றம் தணிந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி தொடக்கம் சுமார் 7.15 மணி வரை தொடர்ச்சியாக இந்தச் சத்தங்கள் கேட்டன.
கொழும்புத் துறைமுகத்தை அடுத்துள்ள பகுதிகளில் திடீரென கடற்படையினரும் குவிக்கப்பட்டு வீதிகளும் மூடப்பட்டிருந்தன.
கொழும்பு துறைமுகத்தின் மீது தாக்குதல் ஒன்று மேற்கொண்டால் அதனை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து போர் ஒத்திகை ஒன்றே நடைபெற்றதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தெரியவந்தது.
ஞாயிறு, 22 மார்ச், 2009
கொழும்பு துறைமுகப் பகுதியில் பாரிய குண்டுச் சத்தங்கள்
லேபிள்கள்:
தமிழ் இனம்,
தமிழினப் படுகொலை,
தேன்மொழி தாஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக