இலங்கை போர் நிறுத்தத்துக்கு இணங்காவிடில் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும்: பிரிட்டன் எம்பி் எம்.பி.ஜோவான் ரியான்
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 02:53.11 AM GMT +05:30 ]
விடுதலைப் புலிகள் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள போர் நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிடில், அந்த நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்று தொழிற்கட்சி எம்.பி யான யோவான் றியான், பிரதமர் கோர்டன் பிறவுனிடம் கேட்டுள்ளார்.
லண்டனிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தாம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளார்.
அவர்களின் (புலிகளின்) கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்துக்குள் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசாங்கம் அறிவிக்காவிட்டால், அந்த நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த யோவான், பிரதமருக்கு அவரசக் கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்தார்.
இதேவேளை, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை நிலைமை தொடர்பான விவாதம் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
திங்கள், 23 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக