கொளத்தூர் மணி பேச்சு அடங்கிய டி.வி.டி. விற்பனை: தடை செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 04:04.52 PM GMT +05:30 ]
பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் திண்டுல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதாவதற்கு முன்பு கொளத்தூர்மணி பேசிய பேச்சுக்கள் டி.வி.டி. மற்றும் “சி.டி.”கேசட்டுகளாக தயாரிக்கப்பட்டு சேலம் மாவட்டம் கொளத்தூர், மேட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இலங்கையில் தமிழர்களை அழிக்க சிங்கள ராணுவத்துக்கு உதவி செய்த இந்திய (காங்கிரஸ்) அரசுக்கு எதிராக ஓட்டு போட வேண்டும் என்று கொளத்தூர் மணி பேசி உள்ளார்.
இந்த டி.வி.டி. மற்றும் சி.டி. கேசட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மேட்டூர் நகர காங்கிரஸ் தலைவர் வெங்கடேசுவரன் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவானந்தத்திடம் ஒரு மனு கொடுத்து உள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர்மணி தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசிய பேச்சு அடங்கிய டி.வி.டி. சட்ட விரோதமாக வெளியிடப் பட்டு உள்ளது. இந்த டி.வி.டி. மேட்டூர் பகுதியில் உள்ள சில முக்கிய இடங்களில் விற்கப்பட்டு வருகிறது. எனவே பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தோடு விற்கப்படும் இந்த டி.வி.டி.க்களை உடனடியாக பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக